முன்பகை காரணமாக மாணவிகள் உட்பட 5 பேர் மீது வீடு புகுந்து தாக்குதல்!

திருநெல்வேலி மாவட்டம் பணகுடி அருகே முன்பகை காரணமாக மாணவிகள் உட்பட 5 பேர் மீது வீடு புகுந்து தாக்குதல் நடத்திய 6 பேர் கொண்ட கும்பலைக் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
பணகுடி அடுத்த சிவகாமிபுரத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி பொன்ராஜ். இவர் குடும்பத்துடன் தனது வீட்டில் உணவருந்திக் கொண்டிருந்தார். அப்போது அதே ஊரைச் சேர்ந்த மற்றொரு குடும்பத்தார் ஆறு பேர் பொன்ராஜ் வீட்டிற்கு கம்பு கற்கள் போன்ற ஆயுதங்களை கொண்டு வந்து பொன்ராஜ் வீட்டைச் சூறையாடினர். வீட்டில் இருந்த திவ்யலட்சுமி, ஜெனிஷா, ஜோதி, கல்லூரி மாணவி டெல்சி ஆகியோரைச் சரமாரியாகத் தாக்கினர்.
தாக்குதலில் காயமடைந்த 5 பேரும் நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளனர்.
காவல்துறையினரின் விசாரணையில் முன்பகை காரணமாகத் தாக்குதல் நடந்துள்ளதாகத் தெரியவந்தது. தாக்குதல் குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *