“எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகர் பிரதமர் அன்வர் இப்ராகிம்!”

Advertisements

நேதாஜி சுபாஷ் சந்திர போசின் இந்திய தேசியப் படையில் பணியாற்றிய ஜெயராஜ் ராஜா ராவ் என்கிற விடுதலைப் போராட்ட வீரரைப் பிரதமர் நரேந்திர மோடி சந்தித்துப் பேசியுள்ளார்.இது குறித்துத் தனது சமூக வலைத்தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில், கோலாரம்பூரில் இந்திய தேசியப் படைவீரர் ஜெயராஜ் ராஜாராவைச் சந்தித்துப் பேசியதாகவும், அவர் வாழ்க்கை துணிச்சல், தியாகம் ஆகியவற்றுக்குச் சான்றாக விளங்குவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அவருடன் அளவளாவி அவருடைய அனுபவங்களைக் கேட்டறிந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
இந்திய விடுதலைக்குப் பாடுபட்ட நேதாஜி சுபாஷ் சந்திரபோசுக்கும் அவரின் படையில் பணியாற்றிய வீரர் வீராங்கனைகளுக்கும் நாம் எப்போதும் கடன்பட்டுள்ளோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல் நண்பர் மலேசியப் பிரதமர் அன்வர் இப்ராகிம் அளித்த மதிய விருந்தில், பாடப்பட்ட பாடல்களில் ஒன்றாக மகத்தான மனிதர் எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படத்தில் இடம்பெற்ற ‘நாளை நமதே’ என்ற பாடலும்  இருந்ததாகக் குறிப்பிட்டு அந்த வீடியோவையும் பதிவிட்டுள்ளார்.
இந்தியாவில் உள்ள நம்மில் பலரைப் போலவே, பிரதமர் அன்வர் இப்ராகிமும் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகர் என்றும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *