மேற்காசியச் சூழலை அரசியலாக்க வேண்டாம்..!

Advertisements

மேற்காசியச் சூழலை அரசியலாக்க வேண்டாம் என்றும், வதந்திகளைப் பரப்ப வேண்டாம் என்றும் அரசியல் கட்சிகளையும், குடிமக்களையும் கேட்டுக்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.

பிரதமராக நரேந்திர மோடி பொறுப்பேற்றதில் இருந்து மனத்தின் குரல் என்னும் தலைப்பில் மாதந்தோறும் வானொலியில் உரையாற்றி வருகிறார். 132ஆவது மாதமாக இன்றும் அவர் வானொலியில் உரையாற்றினார். அப்போது, மேற்காசியப் போர்ச்சூழலில் வளைகுடா நாடுகளில் உள்ள ஒரு கோடி இந்தியர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்ததற்கு அந்நாடுகளுக்குப் பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார்.

இதேபோல் உலகெங்கும் பெட்ரோல், டீசல், எரிவாயுத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், பல்வேறு நாடுகளில் இருந்து எண்ணெய், எரிவாயு ஆகியவற்றை இறக்குமதி செய்து அந்தச் சிக்கலை இந்தியா சமாளித்து வருவதாகக் குறிப்பிட்டார். இத்தகைய சூழலில் நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து அதை எதிர்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

மேற்காசியச் சூழலை அரசியலாக்க வேண்டாம் என்றும், இந்தச்சூழல் 140 கோடி இந்தியர்களின் நலனுடன் தொடர்புடையது என்பதால் எரிபொருள் தட்டுப்பாடு என்று வதந்திகளைப் பரப்ப வேண்டாம் என்றும் அரசியல் கட்சிகளையும் பொதுமக்களையும் பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார்.

 

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *