
தமிழ்நாட்டில் வரும் சட்டமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணி 200 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப் பெருந்தகை தெரிவித்துள்ளார்.
தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப் பெருந்தகை தலைமையில் மதுரையில் தென்மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள், நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய செல்வப் பெருந்தகை, இந்தியா கூட்டணி மிக வலிமையாக
உள்ளதாகவும், கருத்துக்கணிப்பையும் தாண்டி 200 தொகுதிகளில் வெற்றி பெறும் என்றும் தெரிவித்தார்.

