Chembarambakkam: 22 அடியை தாண்டியது ஏரியின் நீர்மட்டம்

Advertisements

22 அடியை தாண்டியது செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம். உபரி நீர் திறப்பு அதிகரிக்க வாய்ப்பு என அதிகாரிகள் தகவல்.

தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக சென்னை குடிநீர் ஆதாரமாக விளங்கும் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. இன்று காலை நேர நிலவரபடி நீர்மட்ட உயரன் 22.04 அடியும், மொத்த கொள்ளளவு 3130 மில்லியன் கன அடி, நீர்வரத்து 301 கன அடி, நீர் வெளியேற்ற 162 கன அடியாக உள்ளது. கடந்த மாதம் செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து 100 கன அடி உபரி நீர் திறந்து விடப்பட்டது. பின்னர் நீர்வரத்து குறைந்ததால் அதனை 50 அடியாக குறைத்த நிலையில் 19 கண் மதகு வழியாக தொடர்ந்து உபரி நீரானது வெளியேற்றப்பட்டு வருகிறது.
தற்போது செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 22 அடியை தாண்டி இருப்பதாலும் தொடர்ந்து மழை பெய்யும் என அறிவித்திருப்பதால் நீர்வரத்து அதிகரிக்கும் என்ற காரணத்திற்காக உபரி திறப்பது அதிகரிக்கப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டத்தை 23 அடி வரை வைத்து கண்காணிக்க முடியும் என்பதால் மழைக்கு ஏற்ப உபரி நீர் திறப்பது அதிகரிப்பது குறித்து அதிகாரிகளுடன் பேசி ஆலோசிக்கப்பட்டு உபரி நீர் திறப்பது அதிகரிக்கப்படும் எனவும் அவ்வாறு உபரி நீர் திறந்து விடப்படும் போது கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படும் எனவும் ஏரிக்கு வரும் நீர்மட்டத்தின் உயரம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *