Advertisements

தமிழகத்தில் ஓடும் ஆம்னி பேருந்துகள் மட்டுமல்ல சொகுசு கார்கள் மற்றும் வெளிநாட்டு பேருந்துகள் அளவுக்கு தமிழக அரசு பேருந்துகள் நவீன வசதி கொண்டவையாக 7 நகரங்களுக்கு வந்து செல்ல போகிறது. தமிழ்நாட்டில் தொலைதூர பேருந்துகள் என்றால் ஆம்னி பேருந்துகள் தான் சொகுசு பயணத்துக்கு ஏற்றவையாக இருக்கின்றன. அரசு பஸ்கள் அனைத்திலும் போதிய வசதிகள் எதுவும் இல்லாதது நீண்டகால வேதனையாக இருந்து வந்தது .
தமிழக அரசாங்கம் ஏன் ஆம்னி பஸ் போல நவீன சொகுசு பேருந்துகளை இயக்கக் கூடாது என்ற கேள்வி எல்லோர் மத்தியிலும் நீண்ட காலமாக இருந்து வருகிறது . அந்த வகையில் சென்னைக்கு இப்போது அதி நவீனமான இருபது வால்வோ பேருந்துகள் வர காத்திருக்கின்றன. இந்த பேருந்துகள் எந்தெந்த ஊருக்கு வந்து செல்ல போகிறது இந்த பேருந்துகளில் என்னென்ன வசதிகள் இருக்கிறது என்பதை பற்றி நாம் விரிவாக பார்க்கலாம் .
பேருந்துகளை வடிவமைக்கும் பிரபல வால்வோ நிறுவனத்திடம் இருந்து 20 மல்டி ஆக்சில் சொகுசு பேருந்துகளை தமிழக அரசு போக்குவரத்து கழகம் வாங்கி இருக்கிறது . வழக்கமாக பேருந்துகள் அனைத்தும் தமிழ்நாட்டில் உள்ள கரூரில் தான் பாடி காட்டுவார்கள். ஆனால் இந்த மல்டி ஆக்சில் பேருந்துகள் முழுமையாக பெங்களூருவில் அசெம்பிள் செய்யப்பட்டு தமிழகம் கொண்டுவரப்பட்டுள்ளன .
முதல் கட்டமாக எட்டு பேருந்துகள் சென்னையில் உள்ள அரசு விரைவு போக்குவரத்துக் கழக பணிமனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளன எஞ்சிய 12 பேருந்துகளும் விரைவில் சென்னைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது . இந்த மல்டி ஆக்சில் வால்வோ சொகுசு பேருந்துகள் வழக்கமான பேருந்துகளை விட அதிக நீளம் கொண்டது அதாவது 15 மீட்டர் நீளம் கொண்ட பேருந்துகளாகும். தற்போது இது போன்று தனியார் வசம்தான் நீளமான பஸ்கள் உள்ளன முதல் முறையாக தமிழ்நாட்டில் இத்தகைய நீளமான பேருந்துகள் களம் இறங்கி இருக்கின்றன .
இந்த பேருந்துகள் சினிமா தியேட்டர் போன்று வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளன பேருந்துகளில் முன்பக்கம் தாழ்வாகவும் பின்பக்கம் உயரமாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது பேருந்தின் முன்புறமும் நடுப்பகுதியிலும் டிவிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் பேருந்தில் பயணம் செய்யும் அனைவரும் தெளிவாக தொலைக்காட்சியை கண்டு ரசிக்க முடியும் முற்றிலும் குளிர்சாதன வசதி கொண்ட இந்த பேருந்துகளில் பயணிகளின் பாதுகாப்பை கருதி சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
இது மட்டுமல்லாமல் பயணிகள் தங்கள் இருந்த இடத்திலிருந்து ஓட்டுநரிடம் பேச விரும்பினால் அதற்கென்று தனியாக மைக் வசதி செய்து தரப்பட்டுள்ளது நாம் டிரைவரிடம் நேராக மைக் மூலம் பேசலாம் . மேலும் ஒவ்வொரு இருக்கையிலும் சீட் பெல்ட் வசதி இருக்கிறது மேலும் செல்போன்களை சார்ஜ் செய்து கொள்ள யூஎஸ்பி சார்ஜிங் வசதி மற்றும் ரீடிங் லைட் அதாவது படிப்பதற்கு வசதியாக சிறிய விளக்கு வசதி நமது இருக்கையின் மேல் பக்கமாக இணைக்கப்பட்டுள்ளன .
இந்த பேருந்தில் அனைத்து ஜன்னல்களும் அவசர காலங்களில் உடைத்து அதன் வழியாக பயணிகள் வெளியேறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன இதனால் விபத்து ஏற்பட்டால் பயணிகள் விரைவாக பேருந்தில் இருந்து வெளியேற முடியும் . இது மட்டுமல்ல இந்த பேருந்தில் தீப்பிடிப்பதை கண்டறியும் வசதியும் தீ விபத்து ஏற்பட்டால் தானாகவே தண்ணீரை பீச்சி அடிக்கும் வகையிலான வசதிகளும் தீயணைப்பு கருவிகளும் பொருத்தப்பட்டுள்ளன .
இந்த பேருந்தின் ஒவ்வொரு இருக்கையிலும் அடிப்பாக உயரத்தை கூட்டி குறைக்கும் வசதி உள்ளது. இதன் மூலம் உயரமான பயணிகள் மற்றும் குள்ளமான பயணிகள் தங்களது வசதிக்கு ஏற்ப இருக்கையின் உயரத்தை ஏற்றவோ இறக்கவோ செய்து கொள்ளலாம் . பேருந்தின் அடிப்பாகத்தில் 14 மீட்டர் அளவிற்கான மிகப்பெரிய லக்கேஜ் வசதி உள்ளது இதன் மூலம் பேருந்தின் அடிப்பகுதியில் இரண்டு சக்கர வாகனங்கள் போன்ற பெரிய பொருட்களையும் ஏற்றி செல்லலாம் .
மொத்தம் 51 இருக்கைகள் இந்த பேருந்தில் இருக்கின்றன . அதாவது இடது பக்கம் இரண்டு வலது பக்கம் 2 என போதிய இட வசதி கொண்டதாக இந்த இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. இது மட்டுமல்லாமல் இருக்கைகளை சாய்க்கும் வசதி என்பது மற்ற பேருந்து போல அல்லாமல் முக்கால் பகுதி அளவுக்கு படுத்து தூங்கும் அளவுக்கு சாய்வு வசதிகளை கொண்டதாக அமைக்கப்பட்டிருக்கிறது. இது மட்டுமல்லாமல் பஸ் முழுவதும் அலங்கார விளக்கு வசதிகளும் பொருட்களை எடுத்துச் செல்வதற்கு மேல் பகுதியில் தேவையான அளவு இட வசதிகளும் இருக்கின்றன .
இது மட்டுமல்லாமல் வழக்கமாக கடைசி இருக்கைகள் என்றால் அதனை யாரும் விரும்புவதில்லை காரணம் போதிய அளவு வசதி இருக்காது அது மட்டுமல்லாமல் மேலும் கீழுமாக தூக்கி தூக்கி அடித்து உடலை நோகச் செய்து விடும் . ஆனால் இந்த வால்வோ பேருந்தில். போதிய அளவு சாய்வு தள வசதி இருப்பதுடன் நல்ல புஷ்பேக் வசதியும் இருக்கிறது. அது மட்டுமல்லாமல் சிறந்த சாக்கப்சர் வசதிகள் இருப்பதால் கடைசி வரைக்கும் தூக்கி அடிக்கப்படுவதில்லை. மேலும் கடைசி இருக்கைக்கு முன்பாக தேவையான அளவு லக்கேஜ் வைத்துக் கொள்ளவும் இட வசதி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது .
இதுமட்டுமல்லாமல் இந்த பேருந்துகளை இயக்கும் ஓட்டுநர்களுக்கும் பல வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன பேருந்தின் முன்பாக மட்டுமல்லாமல் பின்னால் வரும் அனைத்தையும் அறிந்து கொள்வதற்கு டிஜிட்டல் வீடியோக்கள் இருக்கின்றன . இது தவிர இந்த பேருந்தில் பிரேக் வசதி மிக சிறப்பானதாகும். ஓட்டுனரின் இருக்கையும் மிக சொகுசாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது என்பது முக்கிய செய்தி ஆகும்.
இந்த பேருந்துகள் அனைத்தும் 300 கிலோ மீட்டருக்கு மேல் தூரம் கொண்ட மற்றும் அதிக டிமாண்ட் கொண்ட நகரங்களுக்கு முதல் கட்டமாக பயணம் செய்ய இருக்கிறது. சென்னையிலிருந்து பெங்களூரு கோவை மதுரை திருச்சி நாகர்கோவில் திருநெல்வேலி திருவனந்தபுரம் உள்ளிட்ட நகரங்களுக்கு இந்த பேருந்துகள் முதல் கட்டமாக சேவை அளிக்கின்றன. இதில் விசேஷம் என்னவென்றால் ஆம்னி பஸ்களை விட மிகக் குறைந்த கட்டணத்தை வசூலிக்க தமிழக அரசு திட்டமிட்டு இருக்கிறது .
வருகிற டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் விழா வருகிறது ஜனவரியில் புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகை வருகிறது இதனை ஒட்டி இந்த பேருந்துகள் அனைத்தும் விரைவில் தனது சேவையை தொடங்க திட்டமிடப்பட்டிருக்கிறது . இந்த பேருந்துகளுக்கு பயணிகள் வரவேற்பு அளித்தால் கூடுதலாக மல்டி ஆக்சில் பேருந்துகளை வாங்கவும் தமிழக அரசு உத்தேசித்து இருக்கிறது .
ஆகவே தொலைதூர பயணிகள் அனைவரும் ஆம்னி பஸ்.மற்றும் சொகுசு கார்களை மிஞ்சும் அளவுக்கு அரசு வால்வோ பஸ்களில் சொகுசாக பயணம் செய்யலாம் என்பது மகிழ்ச்சி செய்தியாக அறிவிக்கப்படுகிறது .
Advertisements




