Amitshah : மதுரை வருகிறார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா !

Advertisements

மதுரையில் நாளை நடைபெறும் பா.ஜனதா நிர்வாகிகள் கூட்டத்தில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச உள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, டெல்லியில் இருந்து தனி விமானத்தில் இன்று புறப்பட்டு, இரவு 8.30 மணி அளவில் மதுரை வருகிறார். பின்னர் சிந்தாமணி பகுதியில் உள்ள தனியார் ஓட்டலில் இரவு தங்குகிறார். நாளை பகல் 11 மணி அளவில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், சாமி தரிசனம் செய்கிறார். பிற்பகல் 3 மணி அளவில் பா.ஜனதா நிர்வாகிகள் கூட்டத்தில் பேச இருக்கிறார். இதில் கட்சியின் தேசிய பொதுக்குழு உறுப்பினர்கள், மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள் உள்பட 15 ஆயிரம் பேர் வரை கலந்துகொள்வார்கள் என கூறப்படுகிறது. மீனாட்சி அம்மன் கோவிலுக்கு அமித்ஷா செல்ல இருப்பதால், அங்கு செய்யப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கோவில் இணை கமிஷனர் கிருஷ்ணன் மற்றும் போலீஸ் அதிகாரிகள், மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதே போல் பா.ஜனதா நிர்வாகிகள் கூட்டம் நடைபெறும் இடத்திலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *