கூட்டணி யாருடன்? நாளைக்குள் முடிவு: டாக்டர் ராமதாஸ் அதிரடி.!

வரும் சனிக்கிழமைக்குள் யாருடன் கூட்டணி என்பதை அறிவிக்க இருப்பதாக பா.ம.க.நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தெரிவித்தார்.
பாட்டாளி மக்கள் கட்சியில் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, அக்கட்சியினர் இரண்டு பிரிவாக செயல்பட்டு வருகின்றனர்.

இதில், அன்புமணி, அ.தி.மு.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியோடு சேர்ந்து விட்ட நிலையில், ராமதாஸின் கூட்டணி நிலைப்பாடு மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில், விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது, மாவட்ட செயலாளர்கள், மாநில பொறுப்பாளர்களை கூட்டி கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது என்றும், தேர்தலில் எப்படி பணியாற்றுவது, எந்த மாதிரி யுக்திகளை கையாள்வது குறித்து கேட்கப்பட்டு,  எல்லோரும் அதன்படி செயல்பட வேண்டும் என்பதற்காக கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது என்றும் தெரிவித்தார்.

மேலும்,  திராவிட கட்சிகளுடன் கூட்டணி இருக்குமா என்ற கேள்விக்கு பதில் அளித்த பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், வரும் சனிக்கிழமைக்குள் யாருடன் கூட்டணி என்பதை அறிவிக்க இருப்பதாக தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *