PV Sindhu: அரையிறுதிக்கு முன்னேறினார்!

Advertisements

ஆர்க்டிக் ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து அரையிறுதிக்கு முன்னேறினார்.

பின்லாந்தில் ஆர்க்டிக் ஓபன் பேட்மிண்டன் போட்டி நடைபெறுகிறது. இந்தப் போட்டியின் முடிவுகள் பாரிசில் அடுத்த அண்டு நடைபெறும் ஒலிம்பிக் போட்டிக்கான தரவரிசையில் கணக்கிடப்படும். இதனால் இப்போட்டியில் வீரர், வீராங்கனைகள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திவருகின்றனர்.

அவ்வகையில் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து தொடர்ந்து முன்னேறி வருகிறார். இன்று நடந்த காலிறுதி ஆட்டத்தில் வியட்நாம் வீராங்கனை துய் லின் நுயெனை எதிர்கொண்ட பி.வி.சிந்து, 20-22, 22-20, 21-18 என்ற செட்கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

ஆர்க்டிக் பேட்மிண்டன் போட்டியில் பங்கேற்ற இந்திய வீரர், வீராங்கனைகளில் பி.வி.சிந்து மட்டுமே அரையிறுதி வரை முன்னேறியிருக்கிறார். மற்றவர்கள் முந்தைய சுற்றுகளில் தோல்வியடைந்து வெளியேறினர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *