இளைஞர்களின் எதிர்காலத்துடன் விளையாடுபவர்கள் தப்ப முடியாது – பிரதமர் எச்சரிக்கை.!

Advertisements

இளைஞர்களின் எதிர்காலத்துடன் விளையாடுபவர்கள் தப்ப முடியாது என்றும், மாணவர்களின் நலனை பாதுகாக்கும் நடவடிக்கைகள் தொடரும் என்றும் பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார். நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக்கோரி டெல்லி ஜந்தர் மந்தரில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த விவகாரத்தை முன்வைத்து நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனையடுத்து நீட் விவகாரம் குறித்து விவாதிக்க தயாராக இருப்பதாக மத்திய அரசு தெரிவித்தது. இந்நிலையில், இது தொடர்பாக, பிரதமர் நரேந்திரமேடி எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அதில், நமது இளைஞர்களின் நலனையும், அவர்களின் எதிர்காலத்தையும் விட முக்கியமானது வேறு எதுவும் இல்லை எனவும், வினாத்தாள் கசிவு சம்பவங்களில் தொடர்புடையவர்களுக்கு விரைவாகவும் கடுமையாகவும் தண்டனை வழங்கும் வகையில், விரைவு நீதிமன்றங்களை அமைக்க முடிவு செய்துள்ளோம் என்றும், இதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக மேற்கொள்ளுமாறு, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் அலுவலர்களுக்கும் உத்தரவிட்டுள்ளேன் என்றும், மாணவர்களின் நலனையும் அவர்களின் எதிர்காலத்தையும் பாதுகாக்க அரசு தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என்றும், நமது இளைஞர்களின் எதிர்காலத்தை பாதிக்க முயற்சிப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் ஒருபோதும் தப்பிக்க முடியாது என்றும் பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார்..

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *