ஜம்முவில் நடந்த தாக்குதலில் பாரமுல்லா மாவட்டத்தை சேர்ந்த பெண் பரிதாபமாக உயிரிழப்பு..!

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், பாரமுல்லா மாவட்டத்தை சேர்ந்த பெண் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

ஆபரேஷன் சிந்தூரைத் தொடர்ந்து பஞ்சாப், ராஜஸ்தான், மற்றும் ஜம்மு காஷ்மீர் ஆகிய எல்லையோர பகுதிகளில் பாகிஸ்தான் இராணுவம் தாக்குதல் நடத்தியது. இதில், பயங்கரவாதிகளை முன்னேற விடாமல் இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலில் பாகிஸ்தானின் ட்ரோன்கள் தரைமாக்கபட்டது.

இருப்பினும் பாகிஸ்தான் நடத்திய இந்த தாக்குதலில், பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள உரி பகுதியில் நர்கீஸ் பேகம் என்ற பெண் உயிரிழந்துள்ளார்.

மேலும், ரஸேர்வானியின் சேர்ந்த ஹஃபீசா என்ற மற்றொரு பெண் காயமடைந்துள்ளார். வடக்கு காஷ்மீரின் உரி மற்றும் குப்வாரா பகுதிகளில் பயங்கரவாதிகள் நடத்தி வரும் தொடர் தாக்குதலால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *