இந்தியாவை பேச்சுவார்த்தைக்கு அழைத்த பிரதமர் ஷெபாஸ் செரீப்..!

இந்தியாவுடன் பேச்சு நடத்தத் தயாராக உள்ளதாகப் பாகிஸ்தான் பிரதமர் சாபாஸ் சரீப் தெரிவித்துள்ளார்.
காஷ்மீரின் பகல்காமில் சுற்றுலாப் பயணிகளைப் பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்றதற்குப் பதிலடியாகப் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகளின் மறைவிடங்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது.

அதேபோல் சிந்து ஆற்று நீர்ப் பகிர்வு உடன்பாட்டையும் இந்தியா நிறுத்தி வைத்தது. இதையடுத்து அமெரிக்காவின் தலையீட்டால் இரு நாடுகளிடையே போர் நிறுத்தம் நடைமுறைக்கு வந்துள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவைப் பல்வேறு நாடுகளுக்கு அனுப்பி வைத்துப் பாகிஸ்தானின் பயங்கரவாதத் தாக்குதல், அதற்கு இந்தியா பதிலடி கொடுத்ததன் நியாயம் ஆகியவற்றை எடுத்துரைத்தது. இதையடுத்துப் பாகிஸ்தானின் த ரெசிஸ்டன்ட் பிரன்ட் என்னும் அமைப்பை வெளிநாட்டுப் பயங்கரவாத அமைப்பாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

இந்தச் சூழலில் செய்தியாளர்களிடம் பேசிய பாகிஸ்தான் பிரதமர் சபாஸ் சரீப், இந்தியாவுடன் நிலுவையில் உள்ள அனைத்துப் பிரச்சனைகள் தொடர்பாகவும் ஆக்கப்பூர்வமான பேச்சு நடத்த விரும்பவதாகத் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *