
ரஷ்யாவின் கிழக்குப் பகுதியில் காணாமல் போன விமானத்தின் சிதைந்த பாகங்களை மீட்புக் குழுவினர் கண்டறிந்துள்ளனர்.
அங்காரா ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான விமானத்தில் 43 பயணிகளும் ஆறு விமானிகளும் இருந்தனர்.
இந்த விமானம் ரஷ்யாவின் கிழக்குப் பகுதியில் ஆமூர் மண்டலத்துக்குச் சென்றுகொண்டிருந்தபோது ரேடார் கட்டுப்பாட்டை இழந்து காணாமல் போனது.
விமானம் எங்கிருக்கிறது என்பதைக் கண்டறிய மீட்புக் குழுவினர் விரைந்து சென்றனர். அவர்கள் விமானத்தின் ரேடார் கட்டுப்பாடு இல்லாமல் போன இடத்தில் இருந்து 16 கிலோமீட்டர் தொலைவில் குன்றுப் பகுதியில் விமானத்தின் சிதைந்த பாகங்களைக் கண்டறிந்துள்ளனர்.
இதை ஆமூர் மண்டல ஆளுநர் வாசிலி ஆர்லோவ் உறுதிப்படுத்தியுள்ளார்.




