Thalapathy Vijay :22 ஆண்டுகளுக்கு முன் போடப்பட்ட அரசியல் விதை – தளபதியின் Flash Back!

Advertisements

Thalapathy Vijay : இன்று ஜூன் மாதம் 22ம் தேதி தனது 50வது பிறந்தநாளை கொண்டாடி வருகின்றார் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் மற்றும் தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய்.

தமிழ் சினிமாவில் தனது தந்தையின் கரம் பிடித்துத் தான் நுழைந்தார் என்றாலும், “இந்த மூஞ்சி எல்லாம் சினிமாவிற்கு வர வேண்டுமா” என்ற ஏளன பேச்சைக் கேட்டு, கேட்டு வளர்ந்தவர் தான் தளபதி விஜய். அன்று பலர் ஒதுக்கிய அந்த முகம் தான், இன்று ஒரு படத்திற்கு 200 கோடி ரூபாய் சம்பளம் வாங்கும் ஸ்டார் முகமாக மாறி உள்ளது என்றால் அதுவே உழைப்பின் உச்சம்.

இளம் வயது முதலே தனக்கு கிடைக்கும் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் மிக நேர்த்தியாக நடித்து, இந்த வகையான திரைப்படங்களில் மட்டும் தான் நடிப்பேன் என்று தன்னைத்தானே சுருக்கிக் கொள்ளாமல், தன்னை நோக்கி வரும் நல்ல கதைகள் எதுவாக இருந்தாலும் அதைத் தேர்ந்தெடுத்து நடித்து வெற்றி கண்ட நடிகர் தான் விஜய்.

இப்படியிருக்க, கடந்த 2002ம் ஆண்டு வெளியான “தமிழன்” என்கின்ற திரைப்படத்தின் மூலம் தான், சமூக கருத்து கொண்ட படங்களில் தளபதி விஜய் நடிக்கத் தொடங்கினார். குற்றங்களைத் தட்டிக் கேட்கும் துடிப்பான வக்கீலாக அந்தத் திரைப்படத்தில் தளபதி விஜய் நடித்திருப்பார். இன்றைய அரசியல் வாழ்க்கைக்கு அவர் போட்ட முதல் விதை அந்தத் திரைப்படம் என்று கூறினால் அது மிகையல்ல.

அதன் பிறகு கடந்த 2013ம் ஆண்டுத் தளபதி விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் “தலைவா”, ஏ.எல் விஜய் இயக்கத்தில் உருவான அந்தத் திரைப்படத்தில், இறுதியில் தனது தந்தையின் பொறுப்பை ஏற்று, தன்னை நம்பி வந்த மக்களை வழிநடத்தும் ஒரு தலைவனாக மாறுவார் தளபதி விஜய். அது அவரது அரசியல் வருகையைக் குறித்து பேசவைத்த படமாக மாறியது.

அந்தத் திரைப்படத்திற்கு பிறகு வெளியான “மெர்சல்” மற்றும் “சர்க்கார்” ஆகிய இரு திரைப்படங்களும், தளபதி விஜய் நிச்சயம் அரசியலுக்கு வரப்போகிறார் என்பதை உறுதிப்படுத்திய இரு பிரம்மாண்ட திரைப்படங்கள். இந்தச் சூழலில் இவ்வாண்டு தொடக்கத்தில் தனது கட்சியின் பெயரை அறிவித்த தளபதி விஜய், எதிர்வரும் 2026ம் ஆண்டு தேர்தலில் முதல்வர் வேட்பாளராகத் தனது தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாகப் போட்டியிடுகிறார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *