பொருளாதார வளர்ச்சிக்கு பிரிக்ஸ் அமைப்பின் பங்கு மிக முக்கியம் : பிரதமர் உரை.!

பிரிக்ஸ் அமைப்பின் உறுப்பு நாடுகள் உலகப் பொருளாதாரத்தில் 40 விழுக்காட்டையும், உலக வணிகத்தில் 25 விழுக்காட்டையும் கொண்டிருப்பதாகப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

தில்லியில் பிரிக்ஸ் அமைப்பின் வணிகக் கூட்டமைப்பு மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது உறுப்பு நாடுகளிடையே வலுவான வணிகக் கூட்டு வைத்துக்கொள்வது வளர்ச்சி, புத்தாக்கம், செழிப்பு ஆகியவற்றுக்கான புதிய வழிகளைத் திறந்து விடும் என்று தெரிவித்தார்.

இந்தியாவில் தயாரிப்போம், இந்தியாவுடன் இணைந்து புத்தாக்கம் புனைவோம், உலக அளவில் விரிவுபடுத்துவோம் என்று கூறினார். உலக அளவில் நிலையற்ற தன்மை உள்ளபோதும் வளர்ச்சிக்கும் நிலைத்தன்மைக்கும் இந்தியா உறுதியளிப்பதாகப் பிரதமர் நரேந்திர மோடி கூறினார். உலகளாவிய தொழில் நிறுவனங்களுக்குப் புதிய வாய்ப்புகளை வழங்கும் மையமாக இந்தியா விளங்குவதாகத் தெரிவித்தார்.

பிரிக்ஸ் அமைப்பின் உறுப்பு நாடுகள் உலகப் பொருளாதாரத்தில் 40 விழுக்காட்டையும், உலக வணிகத்தில் 25 விழுக்காட்டையும் கொண்டிருப்பதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார். பிரிக்ஸ் அமைப்பின் உறுப்பு நாடுகளின் பொருளாதார வளர்ச்சி எஞ்சிய உலக நாடுகளில் உள்ளதைவிட இருமடங்கு வேகத்தில் உள்ளதாகக் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *