ஆபாசமாக பேச வைப்பதுதான் உங்களின் கடைசி ஆயுதமா?  – நிர்மல்குமார் காட்டம்!

மிசாவில் முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலின் கைது செய்யப்பட்டது தொடர்பாக அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்த கருத்துக்கு, சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு பேசிய திமுக எம்.பி. ஆ.ராசா கடுமையான மொழியில் விமர்சித்திருந்தார்.

இந்நிலையில் ஆ.ராசாவின் பேச்சைக் குறிப்பிட்டு,  அமைச்சர் நிர்மல் குமார் சமூக வலைதளப் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.  அதில்,
“மேடைபோட்டு என்னை பற்றியும், எங்கள் தலைவர் குறித்தும் ஆபாசமாக பேச வைப்பதுதான் உங்களின் கடைசி ஆயுதமா மு.க. ஸ்டாலின்?  என்று குறிப்பிட்டிருந்தார்.

மேலும் ,  ஆர்பாட்டம் என்ற பெயரில் திமுக கட்சியினர் நடத்திய ஆபாச நாடகத்தை மக்கள், குறிப்பாக பெண்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது என்பதை எப்போது உணர்வீர்கள்?  என்று கேள்வி எழுப்பினார். எப்போதெல்லாம் திமுகவை நோக்கி ஊழல், துரோகம், பொய்கள் பற்றி கேள்வி எழுகிறதோ, அப்போதெல்லாம் திமுக எடுக்கும் ஆயுதம் வன்முறை தான் என்று காட்டமாக விமர்சித்துள்ளார்.

தவெகவை எதிர்கொள்ள திராணி இல்லாமல் தெருவில் இறங்கி திமுகவினர் செய்யும் அட்டூழியங்களை என்றும் நேர்மையாக மட்டுமே எதிர்கொள்வோம் என்று நிர்மல்குமார் கூறியுள்ளார்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *