நியூயார்க் நகரில் நடைபெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் ஜெர்மனியின் டிம் புட்ஸ் இணையை வீழ்த்தி இங்கிலாந்தின் நீல் ஸ்கப்ஸ்கி இணை கோப்பையை கைப்பற்றி அசத்தியுள்ளது.
நியூயார்க் நகரில் அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெறுகிறது. இதில், ஆண்கள் இரட்டையர் பிரிவின் இறுதிப்போட்டி இங்கிலாந்தின் நீல் ஸ்கப்ஸ்கி-அமெரிக்காவின் கிறிஸ்டியன் ஹாரிசன் இணை, ஜெர்மனியின் டிம் புட்ஸ்-கெவின் கிராவெய்ட்ஸ் இணையுடன் விளையாடியது. இப்போட்டியில், சிறப்பாக விளையாடிய நீல் ஸ்கப்ஸ்கி இணை 6-4, 8-6 என்ற செட் கணக்கில் வெற்றிப் பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.



