சபலென்காவை வீழ்த்தி அமெரிக்க ஓபன் பட்டத்தை கைப்பற்றினார் எலினா ரிபாகினா.!

நியூயார்க் நகரில் நடைபெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் இறுதிப்போட்டியில் பெலாரசின் அரினா சபலென்காவை வீழ்த்தி கஜகஸ்தானின் எலினா ரிபாகினா சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளார்.

நியூயார்க் நகரில் அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெறுகிறது. இதில், பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில், கஜகஸ்தானின் எலினா ரிபாகினா, பெலாரசின் அரினா சபலென்கா உடன் விளையாடினார்.

இப்போட்டியில் சிறப்பாக விளையாடிய எலினா ரிபாகினா 6-4, 5-7, 6-2 என்ற செட் கணக்கில் வெற்றிப் பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.

நடப்பு ஆண்டு தொடக்கத்தில் நடந்த ஆஸ்திரேலிய ஓபன் இறுதிச்சுற்றிலும் எலினா ரிபாகினா, சபலென்காவைச் சாய்த்து சாம்பியன் பட்டம் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *