
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் ஆறாவது சீசனில் போட்டியாளராக கலந்துகொள்ளப் போகும் பிரபலங்கள் யார் என்பது பற்றிய செய்திகள் வெளியாகியுள்ளது. விஜய் டிவியில் சக்கைப்போடு போடும் ரியாலிட்டி ஷோ என்றால் அது குக் வித் கோமாளி தான். இந்த நிகழ்ச்சி இதுவரை ஐந்து சீசன்கள் முடிவடைந்து உள்ளது.
இந்த நிலையில், குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் மே மாதம் முதல் வெற்றிகரமாக தொடங்கப்பட உள்ளது. இந்நிகழ்ச்சியின் புரோமோக்களும் வரிசையாக வெளியிடப்பட்டு வரும் நிலையில், தற்போது இதில் கலந்துகொள்ள உள்ள போட்டியாளர்கள் யார் என்கிற தகவல் கசிந்துள்ளது.
அதன்படி சன் டிவியில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் தொடரில் நாயகியாக நடித்த மதுமிதாவும் இந்த ஆறாவது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டு தன்னுடைய சமையல் திறமையை காட்ட உள்ளாராம். இவர் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அய்யனார் துணை என்கிற சீரியலில் நாயகியாக நடித்து வருகிறார்.
இதுதவிர நடிகர் விஜய்யின் நண்பன் சஞ்சீவ்வின் மனைவி ப்ரீத்தியும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் ஆறாவது சீசனில் போட்டியாளராக கலந்துகொள்ள அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. அண்மையில் வெளியான புரோமோவில் கூட குரேஷி தன் கையில் ஒரு கார்டு வைத்திருந்தார். அதில் ப்ரீத்தியின் புகைப்படம் தான் இடம்பெற்று இருந்ததாக நெட்டிசன்கள் கண்டுபிடித்து வைரலாக்கி வருகின்றனர். இவர் சின்னத்திரை சீரியல்களிலும் நடித்து வருகிறார்.

