GST வரி குறைப்பின் மூலம் இந்திய மக்களின் வருமானம் அதிகரிக்கும்..!

Advertisements

பொருளாதாரத்தை வலுப்படுத்துவதைத் தொடர்ந்து அனைத்து வரிகளைக் குறைக்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

உத்திரபிரதேசம் மாநிலம் நொய்டாவில் ஐந்து நாள் சர்வதேச வர்த்தக கண்காட்சி தொடங்கியது. இக்கண்காட்சியில்  2400 க்கும் மேற்பட்டட நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளை காட்சிப்படுத்தினர்.  இதில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி கண்காட்சியை தொடங்கி வைத்து பார்வையிட்டார். இதனை தொடர்ந்து, பிரதமர் மோடி பேசியபோது, ஜிஎஸ்டி வரி சீர்திருத்தத்தின் கீழ், எளிமைப்படுத்தப்பட்ட 5% மற்றும் 18% ஜிஎஸ்டி என இரண்டு அடுக்குகளாகக் குறைத்துள்ளது எனக் கூறினார். உணவு, மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் பல பொருட்கள் இப்போது வரி இல்லாததாகவோ அல்லது மிகக் குறைந்த வரி அடுக்கான 5%க்குள் வரும் என்று தெரிவித்தார். ஜிஎஸ்டி வரி குறைப்பின் மூலம் இந்திய மக்களின் வருமானத்தையும் சேமிப்பையும் அதிகரித்துள்ளதாகக் கூறினார். நமது பொருளாதாரத்தை வலுப்படுத்துவதைத் தொடர்ந்து அனைத்து வரிகளைக் குறைக்கப்படும் என்றும் ஜிஎஸ்டியில் கட்டமைப்பு சீர்திருத்தங்கள் இந்தியாவின் வளர்ச்சி கதைக்கு புதிய சிறகுகளைத் தரும் என பெருமிதத்துடன் தெரிவித்தார். இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களை விட நாட்டில் தயாரிக்கப்பட்ட பொருட்களின் முன்னுரிமை அளிக்க வேண்டும் என பொதுமக்களிடம் வலியுறுத்தினார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *