பருவமழை பேரிடர்களை எதிர்கொள்ள அரசு முழு வீச்சில் தயார் : செங்கோட்டையன் .!

வடகிழக்குப் பருவமழை, சூப்பர் எல்நினோ தாக்கத்தை எதிர்கொள்ளும் வகையில் அரசு சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முழு வீச்சில் நடைபெற்று வருவதாகத் தமிழக வருவாய்த் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருவாய்த் துறை சார்பில் வடகிழக்குப் பருவமழைக்கான முன்னேற்பாடுகள் மற்றும் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், அமைச்சர் செங்கோட்டையன், கூடுதல் தலைமைச் செயலாளர் நில நிர்வாக ஆணையர் ராஜேஷ் லக்கானி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதன் பின்னர், அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, வடகிழக்கு பருவமழை மற்றும் சூப்பர் எல்நினோ தாக்கத்தை எதிர்கொள்ளும் வகையில் அரசு சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முழு வீச்சில் நடைபெற்று வருவதாகத் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *