மோடிக்கு தருமபுரம் ஆதீன மடாதிபதி வாழ்த்துக் கடிதம்.!

பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளையொட்டி அவருக்குத் தருமபுரம் ஆதீன மடாதிபதி வாழ்த்துக் கடிதம் அனுப்பியுள்ளார்.

பிரதமர் மோடியின் பிறந்தநாளையொட்டி மயிலாடுதுறை மாவட்டம் தருமபுரம் ஆதீன மடாதிபதி சீர்வளர்சீர் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் வாழ்த்துக் கடிதம் அனுப்பியுள்ளார்.

அந்தக் கடிதத்தில், செந்தமிழ் சொக்கநாத சுவாமிக்கும், தருமபுரம் ஆதீனத்தின் ஆச்சார்யர்களின் தெய்வீகப் பரம்பரைக்கும் தங்கள் மனமார்ந்த பிரார்த்தனைகளைச் சமர்ப்பிப்பதாகத் தெரிவித்தார்.

கங்கை கொண்ட சோழப்புரம் கோவிலின் ஆயிரமாவது ஆண்டு புனித பிரதிஷ்டை போன்ற பிரதமரின் முயற்சிக்கு நன்றிகளை நினைவு கூர்ந்தார்.

ஞானம், தைரியம் இரக்கத்துடன் தேசத்திற்கு தொடர்ந்து சேவை செய்யும் பிரதமருக்கு ஆரோக்கியம், வலிமை மற்றும் நீண்ட ஆயுள் கிடைக்கட்டும் எனத் தருமபுரம் ஆதீன மடாதிபதி வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *