நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்..!

Advertisements

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரபலத் திரைப்பட நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

சின்னத்திரையில், பிரபலமான ரோபோ சங்கர் சினிமாவில் அறிமுகமாகி பல படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து வந்துள்ளார். இந்நிலையில், அவர், சில வருடங்களுக்கு முன்பு மஞ்சள் காமாலை நோயால்  பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

பின்னர், தீவிரச் சிகிச்சைக்குப் பிறகு உடல்நலம் தேறி மீண்டும் படங்களில் நடித்து வந்த நிலையில், மீண்டும் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்துள்ளார்.

பின்னர், சிகிச்சைப் பலனின்றி இரவு 8.30 மணியளவில் உயிரிழந்தார். இதையடுத்து, இவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்

இந்நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திரைக்கலைஞர் ரோபோ சங்கர் மறைவுக்கு ஆழ்ந்த  இரங்கலைத் தெரிவித்தார்.  பின்னர், அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் கலையுலகினருக்கும் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *