
தமிழக சட்டசபை கூட்டத்தொடர் வரும் 20-ந்தேதி முதல் 29-ந்தேதி வரை நடைபெறும் என்று சபாநாயக்ர் அப்பாவு கூறியுள்ளார்.
சென்னை:விக்கிரவாண்டி இடைத்தேர்தலையொட்டி, சட்டசபை கூட்டத்தொடர் முன் கூட்டியே வரும் 20-ந்தேதி நடைபெறும். அலுவல் ஆய்வுக் குழு கூடி, கூட்டத்தொடர் எத்தனை நாட்கள் நடைபெறும் என்பது குறித்து முடிவு செய்யப்படும் என்று நேற்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில், தமிழக சட்டசபை கூட்டத்தொடர் வரும் 20-ந்தேதி முதல் 29-ந்தேதி வரை நடைபெறும் என்று சபாநாயக்ர் அப்பாவு கூறியுள்ளார்.
முதல் நாளான 20-ந்தேதி அன்று மட்டும் காலை 10 மணிக்குச் சட்டசபை தொடங்கும். மற்ற நாட்களில் காலை 9.30 மணிக்கே தொடங்கும் சட்டசபை நிகழ்வுகள் மதியம் 1.30 மணி வரையும், பின்பு பிற்பகல் 5 மணி முதல் இரவு 8 மணி வரையும் நடைபெறும் என்று தலைமை செயலகத்தில் சபாநாயகர் அப்பாவு தலைமையில் இன்று நடைபெற்ற அலுவல் ஆய்வுக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.


