இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிர் தியாகம் செய்த 21 பேருக்கு அஞ்சலி.!

Advertisements

வன்னியர் இட ஒதுக்கீட்டுப் போராட்டத்தின் போது துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களுக்கு வந்தவாசியில் வன்னியர் சங்கம் சார்பில் மெழுகுத்திரி விளக்கேற்றி அஞ்சலி செலுத்தினர்.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் வன்னியர் சங்க மாவட்டத் தலைவர் மச்சேந்திரன் தலைமையில் இட ஒதுக்கீட்டுப் போராட்டத்தின்போது உயிர்நீத்த தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்ட கிழக்கு மாவட்ட பாமக செயலாளர் கணேஷ்குமார், தியாகிகள் படத்தின் முன்பாக மோட்சத் தீபம் ஏற்றி மலர் தூவி உரையாற்றினார்.

அப்போது, வன்னியர் சமுதாயம் உள்ளிட்ட108 சாதிக்கும் இட ஒதுக்கீடு கேட்டுத்தான் 1987இல் சாலை மறியல் நடத்தப்பட்டு, 21 பேர் உயிர்த் தியாகம் செய்ததாகத் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில், நகர பாமக தலைவர் ராமஜெயம், ஒன்றியச் செயலாளர்கள் முருகன், சக்திவேல், இளங்காடு பழனி, சுப்பிரமணி, நடராஜன், பார்த்திபன், செந்தில், சங்கர் நாராயணன், ஹரி கிருஷ்ணன், சந்திரன், நவீன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *