India vs Newzealand : அணிகளுக்கு இடையேயான மூன்றாவது 20 ஓவர் போட்டி.!

இந்தியா, நியூசிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது 20 ஓவர் போட்டி இன்று நடைபெற உள்ளது.

இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி  மூன்று ஒருநாள் மற்றும் ஐந்து 20 ஓவர் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில், ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் நியூசிலாந்து அணி கைப்பற்றியது.

இதையடுத்து, இரு அணிகளுக்கும் இடையே நடைபெறுகிற 20 ஓவர் தொடரில் 2-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில், மராட்டிய மாநிலம் நாக்பூரில், இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது 20 ஓவர் போட்டி நடைபெறுகிறது.

இந்திய அணி தொடர்ச்சியாக வெற்றிப் பெற்று தொடரைக் கைப்பற்றுமா? என ரசிகர்களிடையே ஆர்வம் அதிகரித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *