
ஆந்திராவிற்கு வருகை தரும் பிரதமர் நரேந்திரமோடி, ரூபாய் 13-ஆயிரத்து 430 கோடி திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். பிரதமர் நரேந்திரமோடி நாளை ஆந்திரா மாநிலம் கர்னூல் மாவட்டத்திற்கு வருகை தருகிறார். நாளை கர்னூலில் உள்ள, சிவாஜி-ஸ்பூர்த்தி-கேந்திராவை பார்வையிடுகிறார்.
அதன் பின்னர் கர்னூலில், ரூபாய் 13-ஆயிரத்து 430 கோடி மதிப்பிலான மேம்பாட்டு திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். அதனைத் தொடர்ந்து, ஓர்வக்கல் மற்றும் கொப்பர்த்தி தொழில்துறை வழித்தடத்தை தொடங்கி வைக்கிறார்.
மேலும், பாபக்கினி ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ள பாலத்தை திறந்து வைக்கிறார். குண்டலப்பள்ளி -கனிகிரி புறவழி சாலை பணிக்காக ரூபாய் 4-ஆயிரத்து 920 கோடியில் அடிக்கல் நாட்டுகிறார்.
இதனையடுத்து, சப்பாவரம்-ஷீலாநகர் இடையே ரூபாய் 960 கோடி செலவில் மேம்படுத்தப்பட்ட, பசுமை சாலை கட்டுமான பணிகளுக்கு, அடிக்கல் நாட்டுகிறார். பீலேறு- கலூரு இடையே 4 வழி சாலை விரிவாக்க பணிகளுக்கு, ரூபாய் ஆயிரத்து 140 கோடியில் பணியை தொடங்கி வைக்கிறார்.
கெயில் எரிவாயு திட்டத்தையும் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். நிகழ்ச்சியில், ஆந்திர முதலமை;சசர் சந்திரபாபு-நாயுடு, துணை முதலமைச்சர் பவன்கல்யாண், அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்கின்றனர்.
பிரதமர் நரேந்திரமோடி நந்தியால் மாவட்டத்தில் உள்ள மல்லிகார்ஜூன சுவாமி திருக்கோவில் மற்றும் ஸ்ரீசைலம் கோவில்களில் பூஜை செய்து வழிபடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


