தென் மாவட்டங்களில் விடிய விடிய பெய்த கனமழையால் பள்ளிகளுக்கு விடுமுறை.!

தமிழகத்தில் இன்று முதல் வடகிழக்கு பருவமழை தொடங்குகிற நிலையில், நான்கு மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதால் சென்னை வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழகம், புதுச்சேரி, கேரளம், மாகே, கர்நாடகம், தெற்கு கடலோர ஆந்திரா ஆகிய பகுதிகளில் வடகிழக்குப் பருவமழை தொடங்கிறது. இந்நிலையில், தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

இதைத்தொடர்ந்து, தேனி, தென்காசி, திருநெல்வேலி, இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் பலத்த முதல் மிக பலத்த மழையும் பெய்யக்கூடும் நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதையடுத்து, சென்னை, மதுரை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, விருதுநகர், சிவகங்கை, திண்டுக்கல், திருப்பூர், கோவை, நீலகிரி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.

பின்னர், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் விடிய விடிய பெய்த கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *