கேரளாவில் பெண்களுக்கு இலவசப் பேருந்து பயணம் – மகிழ்ச்சியில் மக்கள்!

Advertisements

கேரளத்தில் அரசுப் பேருந்தில் பெண்கள் இவலசமாகப் பயணிக்கும் பிரியதர்சினி யாத்திரா திட்டத்தைத் திருவனந்தபுரத்தில் முதலமைச்சர் சதீசன் கொடியசைத்துத் தொடக்கி வைத்துப் பேருந்தில் பயணம் செய்தார்

கேரளச் சட்டமன்றத் தேர்தலின்போது காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில், தாங்கள் வெற்றிபெற்றால் மகளிருக்கும் திருநங்கையருக்கும் அரசுப் பேருந்துகளில் இலவசப் பயணத் திட்டம் தொடங்கப்படும் என்று கூறியிருந்தது. அதன்படி பிரியதர்சினி என்கிற திட்டத்தைத் திருவனந்தபுரம் தம்பானூர் பேருந்து நிலையத்தில் கேரள முதலமைச்சர் சதீசன் இன்று தொடங்கி வைத்தார். முதல் பேருந்தில் முதலமைச்சர் சதீசன், போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜான், அதிகாரிகள் ஆகியோர் பயணம் செய்தனர்.

பிரியதர்சினி திட்டத்தின்மூலம் கேரள மாநிலம் முழுவதும் அரசின் அரசின் சாதாரணப் பேருந்துகளில் மகளிரும் திருநங்கையரும் இலவசமாகப் பயணிக்கலாம்.

திட்டத்தைத் தொடங்கிவைத்துப் பேசிய முதலமைச்சர் சதீசன், மகளிர் இலவசப் பேருந்துப் பயணத் திட்டத்தால் அரசுக்கு ஆண்டுக்கு எண்ணூறு கோடி ரூபாய்  செலவாகும் என்று தெரிவித்தார். பெண்கள் மீது அரசு வைத்துள்ள மதிப்பின் அடையாளமாக இந்தத் திட்டம் விளங்கும் என்று குறிப்பிட்டார். இந்தத் திட்டத்துக்கான அரசாணையில் அரசுத்துறைச் செயலாளராக ஒரு பெண் கையெழுத்திட்டுள்ளதாகவும் முதலமைச்சர் சதீசன் குறிப்பிட்டார்.

இது குறித்துப் பேட்டியளித்த கேரளப் போக்குவரத்து அமைச்சர் ஜான், இது ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க பயணம் என்று தெரிவித்தார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *