“விஜய் செய்ததை திமுக செய்யவில்லை!” – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அதிரடி!

Advertisements

30 நாட்களிலேயே 30 ஆண்டுகால திமுக ஆட்சியில் செய்யாததைத் தங்கள் தலைவர் விஜய் செய்துள்ளதாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழத்தின் மாற்றுக்கட்சியினர் இணையும் நிகழ்ச்சியில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது, அதிமுகவிற்கு எடப்பாடி பழனிசாமி துரோகம் செய்துள்ளதாகக் குற்றம் சாட்டினார்.
அதிமுக எனும் கப்பல் மூழ்கவில்லை, அதனை விஜய் மூழ்க விட மாட்டார் என்று கூறினார். மேலும், அதிமுகவும் திமுகவும் ஒன்றாகிவிட்டன எனத் தெரிவித்தார். மேலும், 30 நாட்களிலேயே 30 ஆண்டுகால திமுக ஆட்சியில் செய்யாத காரியங்களைத் தங்கள் தலைவர் விஜய் செய்துள்ளதாகக் கூறினார்.
எனவே, இப்போது தேர்தல் வந்தாலும் சந்திக்க தவெக தயாராக உள்ளதாகத் தெரிவித்தார்.
Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *