ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழக அரசு வழக்கு..!

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. தமிழக சட்டசபையில் கடந்த ஏப்ரல் 29-ஆம் தேதி, தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழக சட்டத்தை திருத்தம் செய்வதற்கான, சட்ட மசோதாவை நிறைவேற்றி, ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

விளையாட்டு பல்கலைக்கழகக் குழுவில், நிதித்துறை செயலர் ஒருவரை நியமிக்க ஏதுவாக சட்ட திருத்தம் செய்யப்பட்டிருந்தது. இந்த மசோதாவை, குடியரசுத் தலைவருக்கு. தமிழ்நாடு ஆளுநர் அனுப்பி வைத்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆளுநருக்கு எதிராக, தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், மசோதாக்களை ஆளுநர் கையாளும் விதம் அரசமைப்பிற்கு எதிரானது என்றும், ஆளுநரின் நடவடிக்கை தன்னிச்சையானது என்றும் அறிவிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *