SupremeCourt:மாதவிடாய் நாட்களில் விடுமுறை..? – அழுத்தம் திருத்தமாக முடிவைச் சொன்ன சுப்ரீம் கோர்ட்!

Advertisements

மாதவிடாய் நாட்களில் விடுமுறை அளிப்பதை கட்டாயமாக்கினால் பணியிடங்களில் பெண்களின் வேலைவாய்ப்பு பாதிக்கும் என்று சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது.

புதுடெல்லி:பெண்களுக்குப் பணியிடங்களில் மாதவிடாய் காலங்களில் விடுப்பு வழங்கும் வகையில் தெளிவான கொள்கைகளை உருவாக்கக் கோரி மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிடுமாறு, பொது நல மனு ஒன்று சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் மாதவிடாய் விடுப்பு விவகாரம் என்பது அரசின் கொள்கை முடிவு என்பதால் அதில் தலையிட முடியாது என்று சுப்ரீம் கோர்ட்டு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக இன்று நடந்த விசாரணையின்போது, “மாதவிடாய் விடுப்பு பெண்களுக்கு வழங்குவதை கட்டாயமாக்குவது அவர்களை ஒதுக்கி வைக்க வழிவகுக்கும். பெண்களைப் பாதுகாக்க எடுக்கும் முயற்சிகள் அவர்களுக்குப் பாதகமாக அமைய வாய்ப்புள்ளது. மாதவிடாய் நாட்களில் விடுமுறை அளிப்பதை கட்டாயமாக்கினால் பணியிடங்களில் பெண்களின் வேலைவாய்ப்பு பாதிக்கும்.

மாதவிடாய் விடுப்பு விவகாரம் என்பது அரசின் கொள்கை முடிவு என்பதால் அதில் தலையிட முடியாது. அதே நேரத்தில் சம்பந்தப்பட்ட மனுதாரர் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சகத்தை நாடி இது தொடர்பான கோரிக்கைகளை முன்வைக்கலாம்” என்று சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி சந்திர சூட் தெரிவித்துள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *