24 ஆண்டுகளாக 1 நாள் கூட லீவ் எடுக்காத ஒரே தலைவர் மோடி – அமித் ஷா புகழாரம்

24 ஆண்டுகளாக ஒரு நாள் கூட விடுமுறை எடுக்காமல் மக்களுக்காக அயராமல் உழைப்பவர்பிரதமர் நரேந்திர மோடி என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

தேசிய தொலைக்காட்சி ஏற்பாடு செய்திருந்த நேர்காணல் நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்றார். அப்போது பேசிய அவர், ஒரு நாள் கூட விடுமுறை எடுக்காமல் மக்களுக்காக அயராமல் உழைப்பவர் பிரதமர் நரேந்திர மோடி எனக் கூறினார். இத்தகைய அர்ப்பணிப்பு தற்செயலாக வருவதில்லை என்றும் பொது சேவைக்கான அவரது அர்ப்பணிப்பால் மட்டுமே இது சாத்தியமானது” என்று தெரிவித்தார். இதனையடுத்து, பிரதமர் மோடி, உள்ளூர் மட்டத்தில் ஒரு கட்சி ஊழியராக தனது வாழ்க்கையைத் தொடங்கிய நிலையில் பாஜகவின் தேசியத் தலைவராக உயர்ந்தார், பின்னர் குஜராத்தின் முதல்வரானார், அதன் பின்னர் இந்திய பிரதமரானார் எனக் கூறினார். மேலும், பிரதமரின் செயல்திறனை அருகிலிருந்து பார்க்கும் அதிர்ஷ்டம் எனக்கு கிடைத்தது என்று அமித் ஷா பெருமிதத்துடன் தெரிவித்தார். இதனை தொடர்ந்து, முதுகெலும்பு கொண்ட வெளியுறவுக் கொள்கையை பிரதமர் உருவாக்கியதாக அமித் ஷா நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *