
பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மேக்ரான் பாலஸ்தீனத்தைத் தனி நாடாக அங்கீகரித்துள்ளார். ஐக்கிய நாடுகள் பொதுச்சபைக் கூட்டம் நியூயார்க்கில் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்கச் சென்றுள்ள பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மேக்ரான், பாலஸ்தீனத்தைத் தனி நாடாக அங்கீகரித்துள்ளார்.
காசாவில் அமைதி நிலவ வேண்டிய நேரம் இது என்றும், காசாவில் நடைபெறும் போரை யாரும் நியாயப்படுத்த முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.
இதுவரை பிரிட்டன், பிரான்ஸ், கனடா, ஆஸ்திரேலியா, போர்ச்சுகல், பெல்ஜியம், லக்சம்பர்க், மால்டா, அண்டோரா, சான்மரினோ ஆகிய நாடுகள் பாலஸ்தீனத்தை அங்கீகரித்துள்ளன.
ஐக்கிய நாடுகள் பொதுச்சபைக் கூட்டத்தில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இன்று உரையாற்றுகிறார். அதற்கு முன் பாலஸ்தீனத்தைத் தனிநாடாகப் பிரான்ஸ் அறிவித்துள்ளது குறிப்பிடத் தக்கது.




