
மத்திய இணை அமைச்சர் எல். முருகன் திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். பக்தர்கள் கட்டுப்பாடின்றி மலைமீது சென்று வழிபாடு செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
அதன்பின், அவர் காசி விஸ்வநாதர் கோவிலுக்குச் செல்லும் நோக்கில் கட்சி நிர்வாகிகளுடன் மலைமீது சென்றார். அப்போது காவல்துறையினர் அவரைத் தடுத்து நிறுத்தி, ஐந்து நபர்களுக்கு மேல் மலைக்குச் செல்ல அனுமதி இல்லையெனத் தெரிவித்தனர். இதனால், எல். முருகன், இரண்டு மாவட்ட செயலாளர்கள் மற்றும் ஒரு கட்சி நிர்வாகியுடன் சேர்ந்து, நான்கு பேர் மட்டுமே திருப்பரங்குன்றம் மலைக்குச் சென்றனர்.
பக்தர்கள் எந்தவிதமான தடைகளும் இல்லாமல் மலைக்குச் சென்று வழிபாடு செய்யும் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். இல்லையெனில், அவர்கள் கோயிலிலிருந்து வெளியே வருவது தான் முக்கியம் என்று அவர் தெரிவித்தார்.
