
குலதெய்வ வழிபாட்டிற்காகக் வளர்ந்துவந்த பன்றியை வேட்டையாடிய மர்ம கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
அணைக்கட்டு: ஒடுகத்தூர் அடுத்த குச்சி பாளையத்தை சேர்ந்தவர் மணி. இவர் குலதெய்வ வழிபாட்டிற்காகக் கடந்த 2 ஆண்டுகளாகப் பன்றி ஒன்றை வளர்த்து வருகிறார். பன்றியைத் தினமும் காலை மேய்ச்சலுக்கு அனுப்பி வைத்துவிட்டு மீண்டும் மாலை கயிற்றால் கட்டி வைப்பது வழக்கம்.
இந்த நிலையில் கடந்த 14-ந் தேதி பன்றியை மேய்ச்சலுக்காக அவிழ்த்து விட்டார். வெகுநேரமாகியும் பன்றி மாலையில் வீடு திரும்பவில்லை. அதனைப் பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தார். அக்கம் பக்கத்தில் விசாரித்தபோது பன்றியைச் சிலர் நாட்டு துப்பாக்கியால் சுட்டு கொன்று அதனை எடுத்துச் சென்றதாகக் கூறினர். சந்தேகம் அடைந்த மணி தனது உறவினர்களுடன் சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்று பார்த்தார்.
அப்போது பன்றியைக் கொன்றதற்கான தடயம் இருந்தது. இதுகுறித்து வேப்பங்குப்பம் போலீசில் மணி புகார் மனு அளித்தார். புகார் மனுவைப் பெற்றுக் கொண்ட போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

