PM Modi: அனைத்து வகையிலான தீவிரவாதத்தை இந்தியா எதிர்க்கும்!

அனைத்து வகையிலான தீவிரவாதத்தை இந்தியா எதிர்க்கும்!

புதுடில்லி: இந்தியா துணை நிற்கும் என இஸ்ரேல் பிரதமருடன் பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியபோது கூறினார். தொலைபேசியில் தன்னுடன் பேசிய இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பிரதமர் மோடி எக்ஸ் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: இஸ்ரேலியர்களுக்கு இந்தியர்கள் உறுதுணையாக இருப்பர். இக்கட்டான சூழலில் இஸ்ரேலுக்கு இந்தியா துணை நிற்கும்.பயங்கரவாதத்தின் அனைத்து வடிவங்கள், வெளிப்பாடுகளை இந்தியா கடுமையாகக் கண்டிக்கிறது. எல்லா வகையிலும் தீவிரவாதத்தை இந்தியா எதிர்க்கும். இவ்வாறு அந்தப் பதிவில் பிரதமர் மோடி கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *