Pesticides Banned: பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு தடை!

நான்கு பூச்சிக்கொல்லி மருந்துகளைப் பயன்படுத்த மத்திய அரசுத் தடை விதித்துள்ளது. டிகோஃபோல், டைனோகேப், மெத்தோமைல் மற்றும் மோனோகுரோட்டோபாஸ் ஆகிய மருந்துகளைப் பயன்படுத்துவதை முற்றிலும் தடை செய்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்தப் பட்டியலில் முதல் 3 மருந்துகளின் பதிவுச் சான்றிதழ், விற்பனை மற்றும் விநியோகம் முற்றிலும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மோனோகுரோட்டோபாஸ் மருந்து தயாரிப்பதற்கு புதிய பதிவுச் சான்றிதழ் வழங்கப்பட மாட்டாது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *