Puducherry: LJK கட்சிக்கு ஒதுக்கப்பட்ட 2 தொகுதிகள்… அதிருப்தியில் அதிமுக.!

புதுச்சேரியில் புதிய கட்சியான லட்சிய ஜனதா கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், அதிமுகவுக்கு 2 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதால் தொண்டர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது..

புதுச்சேரி மாநிலத்தில் வருகின்ற சட்டமன்ற தேர்தலையொட்டி தேசிய ஜனநாயக கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ் கட்கிக்கு 16 தொகுதியும், பாஜக கட்சிக்கு 14 தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில், பாஜக கூட்டணியில் உள்ள அதிமுகவுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஆனால், புதிய கட்சியான லஜகவுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அதிமுக இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு 2 முறை ஆளும் கட்சியாகவும், இதர கட்சியுடன் கூட்டணியாகவும் வென்றது.

ஆனால், தற்போது, வெறும் 2 தொகுதிகள் மட்டும் ஒதுக்கப்பட்டது தொண்டர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *