தேர்தல் களத்தில் மகளிர் அணியின் பங்கு முக்கியம்..!

Advertisements
மகளிர் அணியைச் சேர்ந்த பெண்கள் வீடு வீடாகச் சென்று திமுகவின் கொள்கைகளை விளக்கி ஆதரவு திரட்ட வேண்டும் என்று  நாடாளுமன்ற உறுப்பினர் கேட்டுக் கொண்டார்.
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியில் திமுக சார்பில் மகளிர் பயிற்சி முகாம் நடைபெற்றது. முகாமில், நாடாளுமன்ற உறுப்பினர் தரணிவேந்தன், சட்டமன்ற உறுப்பினர் அம்பேத்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து, முகாமில் நாடாளுமன்ற உறுப்பினர் தரணிவேந்தன் பேசிய போது, மகளிர் அணியைச் சேர்ந்த பெண்கள் வீடு வீடாகச் சென்று பெண்களை நேரில் சந்தித்து, அரசின் நலத்திட்ட உதவிகளையும் திமுகவின் கொள்கைகளையும்  விளக்கி ஆதரவு திரட்ட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இதில், திமுக செயலாளர் தயாளன், நகர் மன்ற தலைவர் ஜலால், ஒன்றிய செயலாளர்கள் ராதா,  இளங்கோவன், பழனி, பெருமாள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *