Periyapalayam Bhavani Amman Temple: 159 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டுமான பணிகளுக்கு அடிக்கல்!

Advertisements

பெரியபாளையம் பவானி அம்மன் ஆலயத்தில் 159 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அடிப்படை வசதிகளுகுகான கட்டுமான பணிகளுக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்.

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்தில் ஆரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள அருள்மிகு பவானிஅம்மன் திருக்கோயில் சிறப்பு வாய்ந்தது. சுயம்புவாக எழுந்தருளிய அம்மனை வழிபட ஆடிமாதத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். ஆடி மாதம் முதல் வாரம் தொடங்கி 14வாரங்கள் இந்தப் பெரியபாளையம் பவானி அம்மன் ஆலயம் விழா கோலம் பூண்டிருக்கும். பக்தர்களுக்குப் பல்வேறு அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என்று பல ஆண்டுகளாகக் கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது.

இதனையடுத்து பெரியபாளையம் பவானி அம்மன் ஆலயத்தில் சுமார் 159 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருமண மண்டபம், அன்னதான கூடம், பக்தர்கள் தங்கும் விடுதி உள்ளிட்ட  அடிப்படை வசதிகளுக்கான கட்டுமான பணிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சிமூலம் பணிகளைத் தொடங்கி வைத்தார்.

இதனையடுத்து ஆலய வளாகத்தில் திருப்பணிகளுக்கு அமைச்சர் காந்தி, கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராசன், மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் ஆகியோர் குத்துவிளக்கேற்றி, அடிக்கல் நாட்டி வைத்துப் பணிகளைத் தொடங்கி வைத்தனர். இதில் எல்லாபுரம் ஒன்றிய கழகச் செயலாளர் பி.ஜே. மூர்த்தி, பொதுக்குழு உறுப்பினர் ராமமூர்த்தி, மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி, வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் சீனிவாசன். ஆகியோர் உட்பட பலர் உடன் இருந்தனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *