குடியரசு தலைவர் திரவுபதி முர்முவுடன் டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா!

டெல்லி மாநிலத்தின் புதிய முதலமைச்சர் ரேகா குப்தா, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை நேரில் சந்தித்தார். நேற்று (வியாழக்கிழமை) அவர் தனது பதவியை ஏற்றுக்கொண்ட நிலையில், இன்று குடியரசுத் தலைவர் மாளிகையில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது.

இந்தச் சந்திப்பு தொடர்பான தகவல்களைக் குடியரசுத் தலைவர் அலுவலகம் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளது. அந்தப் பதிவில், “டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை குடியரசுத் தலைவர் மாளிகையில் சந்தித்தார்,” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

குடியரசு தலைவருக்குப் பிறகு, குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கரையும் ரேகா குப்தா சந்தித்தார்.

டெல்லியின் நான்காவது பெண் முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள ரேகா குப்தா, ஆறு அமைச்சர்களுடன் இணைந்து பதவியேற்றுள்ளனர். இவர்களின் பதவியேற்பு விழா டெல்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் நடைபெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *