Tiruttani Subramanya Swami Thirukkovil: குரங்குகளைப் பிடித்து வனப்பகுதியில் விடப் பக்தர்கள் கோரிக்கை!

திருத்தணி அருள்மிகு சுப்பிரமணியசுவாமி மலைக்கோவிலில் அதிகளவில் சுற்றித்திரியும் குரங்குகளைப் பிடித்து வனப்பகுதியில் விட வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

பக்தர்கள் பூஜைக்காக வாங்கிச்  செல்லும், தேங்காய், பழம் ஆகியவற்றை கண்டதும் குரங்குள் துரத்தி வந்து பக்தர்களிடத்திலிருந்து பறித்துக் கொண்டு செல்கிறது. சில நேரங்களில் பக்தர்கள் கொடுக்க மறுக்கும்போது, குரங்கள் பக்தர்களைக் கடித்துவிடுகிறது.

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருள்மிகு சுப்பிரமணியசுவாமி மலைக்கோவிலுக்கு தினமும் தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து மூலவரை வழிப்பட்டு செல்கின்றனர். இந்நிலையில், கடந்த சில மாதங்களாக மலைக்கோவிலில் குரங்குகள் அதிகளவில் நடமாடி வருகிறது.

மலைக்கோவில் வளாகம், தேர்வீதி மற்றும் கோவில் உட்புறத்தில் உள்ள கொடி மரம், பொதுவழி மற்றும் சிறப்பு தரிசனம் வழி ஆகிய இடங்களில், 70-க்கும் மேற்பட்ட குரங்குகள் தொடர்ந்து சுற்றி வருகின்றன.
அதாவது, பக்தர்கள் பூஜைக்காக வாங்கிச்  செல்லும், தேங்காய், பழம் ஆகியவற்றை கண்டதும் குரங்குள் துரத்தி வந்து பக்தர்களிடத்திலிருந்து பறித்துக் கொண்டு செல்கிறது. சில நேரங்களில் பக்தர்கள் கொடுக்க மறுக்கும்போது, குரங்கள் பக்தர்களைக் கடித்துவிடுகிறது.

எனவே கோவில் நிர்வாகம் மலைக்கோவிலில் அதிகளவில் சுற்றித்திரியும் குரங்குகளைப் பிடித்து வனப்பகுதியில் விட வேண்டும் என, பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *