Pattukkottai: நன்றி கடனாக வென்டிலேட்டர் கருவி வழங்கிய மருத்துவர்கள்!

பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த குழந்தையைக் காப்பாற்றியதற்காக மருத்துவமனைக்கு நன்றி கடனாக ஒரு லட்சம் மதிப்புள்ளான வென்டிலேட்டர் கருவியைத் தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் வழங்கினர்

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதிராம்பட்டினம் தனியார் குழந்தைகள் நல மருத்துவர் ஹாஜா மைதீன் என்பவரின் பேரக்குழந்தை மூச்சுத் திணறல் ஏற்பட்டு மிகவும் ஆபத்தான நிலையில் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள்முயற்சியில்குழந்தைகாப்பாற்றப்பட்டது .

இந்நிலையில் அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகள் மற்றும் பொதுமக்கள்பயன்பெறும் வகையில்குழந்தைகள் மருத்துவர் ஹாஜா மைதீன் மற்றும்அய்யாசாமிகுழந்தைகள்மருத்துவமனையின் மருத்துவர் ராம்பிரகாஷ் ஆகியோர் இணைந்து சுமார் ஒரு லட்சம் மதிப்பிலான வென்டிலேட்டர் கம்பரசர் கருவியைப் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர்அன்பழகனிடம் வழங்கினர்.

இதில் அரசு மருத்துவர்கள் மற்றும்செவிலியர்கள் உடன் இருந்தனர்.தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் அரசு மருத்துவமனைக்கு ஒரு லட்சம் மதிப்பில் குழந்தைகள் உயிர் காக்கும் கருவி வழங்கியது நிகழ்வு பொதுமக்கள் மத்தியில்நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *