Madhya Pradesh : தமிழர்கள் உட்பட 10 பேர் உயிரிழப்பு – சசிகலா உருக்கம்..!

மத்திய பிரதேச  படகு விபத்தில்,  தமிழர்கள் உட்பட 10 பேர் உயிரிழந்ததிற்கு, சசிகலா இரங்கல் தெரிவித்துள்ளார்.
அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் சசிகலா தனது எக்ஸ் தளத்தில், செய்தி வெளியிட்டுள்ளார். அதில், மத்தியபிரதேச மாநிலம் ஜபல்பூர் மாவட்டத்தில் பார்கி அணையில் ஏற்பட்ட படகு விபத்தில், திருச்சியை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 5 நபர்கள் உட்பட 10 நபர்கள் உயிரிழந்திருப்பது மிகவும் அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது என்று சசிகலா தெரிவித்துள்ளார்.

மேலும், திருச்சியிலிருந்து மத்தியபிரதேசத்திற்கு சுற்றலா பயணம் மேற்கொண்ட குடும்பத்தினர் அங்கு உள்ள பார்கி அணையில் படகில் சவாரி செய்த போது திடீரென்று படகு நீரில் மூழ்கி விபத்து ஏற்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன என்றும், இதில் பயணம் செய்த 41 நபர்களில் இதுவரை 28 நபர்கள் மீட்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன என்றும்,  மீதமுள்ளவர்களையும் மீட்க தேவையான நடவடிக்கைளை விரைந்து எடுக்க வேண்டும் என மத்திய பிரதேச மாநில அரசைக் கேட்டுக்கொள்கிறேன் என சசிகலா தெரிவித்துள்ளார்.

மேலும், மத்திய பிரதேச மாநில படகு விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர்களுக்கும், அவர்களது நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன் எனவும், அன்னார்களது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன் எனவும், சசிகலா தன எஸ்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *