Tasmac Scam :டாஸ்மாக் ஊழல் வழக்கு விசாரணையில் இருந்து நீதிபதிகள் விலகல் !

Advertisements

டாஸ்மாக் ஊழல் வழக்கு விசாரணையில் இருந்து நீதிபதிகள் ரமேஷ், செந்தில் குமார் ஆகியோர் விலகியுள்ளனர்.

சென்னை எழும்பூரில் தாலமுத்து நடராசன் மாளிகையில் உள்ள டாஸ்மாக் தலைமையகத்தில் அமலாக்கத் துறையினர் தொடர்ந்து மூன்று நாட்கள் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின் முடிவில் டாஸ்மாக் நிறுவனத்தில் ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதாக அறிக்கை வெளியிட்டனர்.
இதையடுத்து அமலாக்கத்துறை மீது நடவடிக்கை எடுக்கக் கோரிச் சென்னை உயர்நீதிமன்றத்தில் டாஸ்மாக் சார்பில் மூன்று மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
அந்த மனுக்களில் மாநில அரசின் அனுமதி இல்லாமல் டாஸ்மாக் மீது நடவடிக்கை எடுக்க அமலாக்கத்துறைக்குத் தடை விதிக்க வேண்டும் என்றும், விசாரணை என்கிற பெயரில் டாஸ்மாக் அதிகாரிகளைத் துன்புறுத்துவதற்குத் தடை விதிக்க வேண்டும் என்றும், ஆவணங்களைப் பறிமுதல் செய்ததைச் சட்டவிரோதம் என அறிவிக்க வேண்டும் என்றும் கோரியுள்ளது.
இந்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள் ரமேஷ், செந்தில்குமார் ஆகியோர், அமலாக்கத்துறை பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். அதுவரை டாஸ்மாக் அதிகாரிகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கத் தடை விதித்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கில் இருந்து விலகிக்கொள்வதாக நீதிபதிகள் இருவரும் அறிவித்துள்ளனர். இனி இந்த வழக்கு வேறொரு அமர்வில் விசாரணைக்குப் பட்டியலிடப்படும்.
Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *