Raghava Lawrence: அடுத்த படம் இவரின் இயக்கத்தில் தானா?

Advertisements

சின்னத்திரையிலிருந்து தற்போது வெள்ளித்திரையில் மின்னி வருகிறார் சிவகார்த்திகேயன். விஜய், அஜித்க்கு அடுத்த படியாக இவர் தான் உள்ளார்.

மேலும், தொடர்ந்து முற்றிலும் மாறுபட்ட கதைகளைத் தேர்வு செய்து நடித்து வருகிறார் SK. ஒரு பக்கம் பல சர்ச்சைகள் அவரைச் சூழ்ந்து வந்தாலும் அசராமல் தொடர்ச்சியாக நடித்து வருகிறார். மேலும், அயலான் படத்தின் செகண்ட் சிங்கிள் பாடலான “அயலா அயலா” இன்று வெளியாக உள்ளது. அயலான் வருகிறது ஜனவரி 12,2024 பொங்கல் பண்டிகைக்கு வர உள்ளது குறிப்பிடதக்கது.

அயலான் படத்துக்குப் பின்னர் இப்பட இயக்குனர் ரவி என்ன செய்யப் போகிறார் என்கிற கேள்வி எழுந்து வந்த நிலையில், அவர் சூரியாவிடம் கதை கூறி ஓகே செய்து விட்டார் என்றும், ஏப்ரல் மாதம் ஷூட்டிங் செல்ல வாய்ப்புகள் இருப்பதாகத் தெரிய வந்தது. ஆனால், சூரியா அவர்களின் தற்போதைய கமிட்மென்ட்கள் காரணமாக இப்படம் இரண்டு வருடங்களுக்குத் தள்ளிப் போயுள்ளது.

இதனால், SK விடம் அதே கதையைக் கூறி ஓகே வாங்கி ஷூட் செல்லலாமென இருந்த ரவிக்கு, மீண்டும் சிக்கல் வந்தது. ஆம், SKவின் கால்ஷீட் நிரம்பி உள்ளதால், அவரும் தற்போது முடியாது எனக் கை விரித்து விட்டாரெனத் தெரிய வந்துள்ளது.

இதனால், ராகவா லாரன்ஸ் அவர்களிடம் ஒரு கதையைக் கூறி சம்மதம் வாங்கி உள்ளார் ரவி. விரைவில் இதன் அறிவிப்பு வெளியாகும் வாய்ப்புகள் உள்ளது. மேலும், இந்தப் படத்துக்கு ஜி வி பிரகாஷ் அல்லது சந்தோஷ் நாராயணன் இருவரில் ஒருவர் இசையமைக்க வாய்ப்புகள் உள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *