Paschimottanasana: தலைவலியைப் போக்கும் ஆசனம்!

Advertisements

தலைவலியைப் போக்கும் பஸ்சிமோத்தானாசனம்!

பஸ்சிமோத்தானாசனம் என்னும் ஆசனத்தை புஜங்காசனம், சலம்ப புஜங்காசனம் இரண்டுக்கும் மாற்றாகச் செய்யலாம். ‘பஸ்சிமா’ என்றால் வடமொழியில் ‘மேற்கு’ என்று பொருள். ‘உத்தனா’ என்றால் ‘மிகுவாக நீளுதல்’ (intensive stretching) என்று பொருள். பின் உடலைக் கொண்டு நீளுதல், அதாவது, அமர்ந்த நிலையில் உடலை முன் வளைத்து நீட்டுதல் ஆகும்.

Advertisements

இதில் உடலின் பின் பகுதி, குறிப்பாக முதுகுத்தண்டு முன்னோக்கி இழுக்கப்படுகிறது. முதுகுத்தண்டு இழுக்கப்படுவதால் அதன் இயக்கம் மேம்படுகிறது. முதுகுத்தண்டிலிருந்து மற்ற உறுப்புகளுக்கு சக்தி பாய்ச்சப்படுகிறது. அதனால், இந்த ஆசனத்தைத் தொடர்ந்து செய்வதனால் நோய்கள் அண்டாத நிலை ஏற்படுகிறது. அதனாலயே, ஆசனங்களில் பஸ்சிமோத்தானாசனம் ஒரு சிறந்த ஆசனமாகக் கருதப்படுகிறது.

பஸ்சிமோத்தானாசனத்தின் பலன்கள்:

கழுத்து தொடங்கி பாதம் வரை, பின் உடலின் அனைத்துத் தசைகளையும் நீட்டிக்கிறது (stretch).நரம்பு மண்டலத்தைப் பலப்படுத்துகிறது.வயிற்று உள் உறுப்புகளின் இயக்கத்தைப் பலப்படுத்துகிறது.

வயிற்றில் உள்ள அதிகக் கொழுப்பைக் குறைக்கிறது.சீரணத்தை மேம்படுத்துகிறது; அசீரணத்தால் ஏற்படும் தலைவலியைப் போக்குகிறது.மாதவிடாய் கோளாறுகளையும், மாதவிடாய் நேரத்தில் ஏற்படும் வலியையும் போக்குகிறது.மனதை ஒருமுகப்படுத்துகிறது.

செய்முறை:

பஸ்சிமோத்தானாசனம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.விரிப்பில் கால்களை நீட்டி அமர்ந்து கொள்ளவும். முதுகை நேராக வைத்து மூச்சை உள்ளிழுத்துக் கொண்டே கைகளை மேல் நோக்கி உயர்த்தவும்.மூச்சை வெளியேற்றிக் கொண்டே கைகளை முன்னால் நீட்டியவாறே முன் நோக்கி குனியவும்.

கைகளால் கால் பாதங்கள் அல்லது கால் கட்டை விரல்களைப் பிடித்துக் கொள்ளவும். கால் முட்டியை வளைக்கக் கூடாது. நெற்றியை காலில் வைக்கவும்.20 வினாடிகள் இந்த நிலையில் இருக்கவும். பின், கால்களை விடுவித்து பழைய நிலைக்கு வரவும்.

குறிப்பு:

பாதத்தைப் பிடிக்க முடியவில்லை என்றால் முடிந்த அளவு குனிந்து கை எட்டும் இடத்தில் பிடிக்கவும்.Slipped disc மற்றும் sciatic கோளாறு உள்ளவர்கள் இந்த ஆசனத்தைப் பயிலக் கூடாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *