Asoka halwa recipe: தீபாவளி ஸ்பெஷல்!

Advertisements

தீபாவளி ஸ்பெஷல் அசோகா அல்வா!

அல்வா என்றாலே  நிறைய நபர்களுக்கும் பிடிக்கும். ஆனால் அதிகம் சாப்பிட முடியாது. சிறிதளவு சாப்பிட்டாலே திகட்ட ஆரம்பித்து விடும். ஆனால் அசோகா அல்வா அப்படி இல்லை. சாப்பிட சாப்பிட ருசியாகவும், திகட்டவே திகட்டாது. பெரும்பாலானவர்கள் இதை கடையில் தான் வாங்கி சாப்பிடுவார்கள். வீட்டில் செய்தால் கடையில் வாங்கி சாப்பிடுவது போல் ருசியாக இருக்காதோ என்று நினைப்பார்கள். ஆனால் இனிமேல் கடையில் வாங்கி சாப்பிடுவது போல வீட்டிலே செய்யலாம்.

Advertisements

அசோகா அல்வா செய்ய தேவையான பொருட்கள்:

பாசிப்பருப்பு- 1/2 கப்.
நெய் – 1/2 கப்.
சர்க்கரை- 1 கப்.
கோதுமை மாவு – 2 தேக்கரண்டி.
ஏலக்காய் தூள்- சிறிதளவு.
முந்திரி – சிறிதளவு.


அசோகா அல்வா செய்முறை:

முதலில் பாசிப்பருப்பை கழுவி விட்டு தண்ணீர் ஊற்றி வேக வையுங்கள். இந்த பருப்பானது நன்றாக பேஸ்ட் மாதிரி வேக வேண்டும். பருப்பு வெந்த பிறகு அதை மசித்து கொள்ளலாம். இல்லையென்றால் நன்றாக அரைத்து கொள்ளுங்கள்.

பின் அடுப்பை பற்ற வைத்து கடாய் வைத்து கொள்ளுங்கள். கடாய் சூடானதும் எடுத்து வைத்திருக்கும் நெய்யில் 1/4 கப் நெய் மட்டும் ஊற்றி கொள்ளுங்கள். நெய் உருகியதும் சிறிதளவு முந்திரி பருப்பு சேர்த்து பொன்னிறம் வரும் வரை வதக்குங்கள். பொன்னிறம் வந்ததும் தனியாக எடுத்து கொள்ளுங்கள்.


பிறகு அதே கடாயில் 2 தேக்கரண்டி கோதுமை மாவு சேர்த்து 1 நிமிடம் வரை வதக்குங்கள். பின் அரைத்து வைத்த பேஸ்ட்டை சேருங்கள். பின் கட்டி ஆகாமல் கரண்டியை பயன்படுத்தி கிண்டி விட்டே இருங்கள். ஒரு 2 நிமிடம் வெந்ததும் 1 கப்  சீனியை சேருங்கள்.

சீனி சேர்த்ததும் இளகிய பதம் வரும். ஆனால் கொஞ்ச நேரத்திலே கெட்டியான பதத்திற்கு வந்துவிடும். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக நெய்யை சேர்த்து கொண்டே இருங்கள்.

உங்களுக்கு விருப்பம் இருந்தால் அதில் கலர் பவுடர் சேர்க்கலாம். இல்லையென்றால் அப்படியே இருக்கலாம். பின் அசோகா பாத்திரத்தில் ஒட்டாமல் திரண்டு வரும் அந்த பதத்தில் ஏலக்காய் தூள், வறுத்து வைத்திருக்கின்ற முந்திரி பருப்பு, நெய் போன்றவற்றை சேர்த்து கலந்து விடுங்கள்.

அவ்வளவு தாங்க வாயில் போட்டாலே சும்மா சல்லுன்னு உள்ளாரா போகின்ற அசோகா அல்வா ரெடி..! உங்கள் வீட்டிலும் செய்து சுவைத்து பாருங்கள்..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *