
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக வேட்பாளர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் சென்னை மற்றும் அதைச்சுற்றியுள்ள மாவட்டங்களின் திமுக வேட்பாளர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டார்.
இக்கூட்டத்தில், அமைச்சர்கள் சேகர்பாபு, மா.சுப்பிரமணியன், நாசர், எபினேசர், மயிலை த.வேலு, காஞ்சிபுரம் சுந்தர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதில், மே 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையின்போது திமுக நிர்வாகிகள் மேற்கொள்ள வேண்டிய கண்காணிப்பு பணி குறித்து முதலமைச்சர் அறிவுரை வழங்கினார்.




